காயம் ஆறினாலும் அதன் வடு ஆயுள் காலம் வரை இருக்கும்.அது மண்ணோடு மண்ணாக கலந்து விடும்.அல்லது சிதையில் சாம்பலாகிவிடும்!
அதைப் போன்றதுதான் கங்கனாவின் அக்கா ரங்கோலியின் வாழ்க்கையும்.!
கங்கனாவும் அக்காவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். சயின்ஸ் குரூப்.
இருவருமே அழகானவர்கள்தான்!
அக்கா ரங்கோலியை மாணவன் சைட் அடித்தான் .இன்பாச்சுவேஷன் என ஒதுக்கிவிடமுடியாது. மணந்தால் மகாதேவி இல்லையேல் பலி தீர்ப்பேன் என்கிற வன்முறைவாதி.
புரபோஸ் பண்ணினான்.
‘முடியாது’ என ரங்கோலி மறுத்தார்.
‘விடமாட்டேன்’ என தொடர்ந்தான்.பயமுறுத்தினான்.
ஆனாலும் அவர் இணங்கவில்லை.
அதற்கு பின்னர் என்ன நடந்தது. ரங்கோலியே சொல்வார் கேளுங்கள்!
“ஒரு நாள் ஒரு லிட்டர் ஆசிட்டுடன் வந்தான் .என் முகத்தில் வீசினான்.ஒரு லிட்டர்.முகத்தின் இடது பக்கம் நாசம். என் தங்கை கங்கனாவையும் கடுமையுடன் தாக்கினான் மரண அடி.என் முகத்தில் 54 தையல்கள் .இடது காது கெட்டது. ஆனாலும் என்னுடைய கணவர் என்னுடைய பெற்றோர் ,தங்கை ஆகியோரின் அக்கறையினால் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன்” என்கிறார்.