எஸ்.டி.ஆர் .வெளிநாட்டில் இருந்து திரும்பி இத்தனை நாளாகியும் அவரது புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை.
‘மகாமாநாடு’என்கிற அவரது சொந்த நிறுவனப் படம் பற்றிய செய்தியும் காணவில்லை.
அவர் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருக்கிற ரசிகர்கள் ‘அண்ணனின் அமைதி ‘பற்றி விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜாவின் கன்னட ரீமேக் படம் கைவிடப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் எஸ்.டி.ஆர்.தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவதில்லை,சரியாக ஒத்துழைப்புத் தருவதில்லை என சொல்லி எஸ்.டி.ஆர்.மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.