பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் நடப்பு வாரத்தைக் கோலிவுட் கடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை காதல் செய்திகளுக்கு நிலவிய கடும் பற்றாக்குறையை நீக்கி இருக்கிறது.
இது அதிகாரப் பூர்வமற்ற கிசு கிசு .என்றாலும் வெடி இல்லாமல் எப்படி சார் தீபாவளி வரும் என்கிறார்கள்
மறைந்த நடிகர் முரளிக்கு அதர்வா, ஆகாஷ் ,காவ்யா ஆகிய பிள்ளைகள் உண்டு. இவர்களில் அதர்வா பிரபல நடிகராக இருக்கிறார்.
இவரது தம்பி ஆகாஷ் பிரபல தொழிலதிபர்,படத்தயாரிப்பாளர்,மற்றும் தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினரான ஒருவரது மகளை காதலிக்கிறார் என்பதாக அந்த கிசு கிசு சொல்கிறது.அந்த பெண் ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியவர் என்றும் சொல்கிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.