லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கப் போகிறார். அதற்காக நடிகை தமன்னாவிடம் பேசி விட்டார்கள். ஷூட்டிங் ஸ்பாட் தேடுதல் வேட்டை நடக்கிது என்றெல்லாம் சரமாரியாக செய்திகள் .
அவரின் விளம்பரப்படங்களை இயக்கிவருகிற ஜேடி -ஜெரி ஜோடியோ அந்த செய்திக்கு எவ்வித ரீ-ஆக்சனையும் காட்டவில்லை. அண்ணாச்சியின் நெருங்கிய வட்டாரத்தைக் கேட்டால் சிரிக்கிறார்கள்.
“அண்ணாச்சிக்கு அந்த மாதிரி ஆசையெல்லாம் கிடையாது. அவர் ஒரு மால் கட்டப் போகிறார். அது சென்னையையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் இருக்கப்போகிறது.அதில்தான் அவரது முழுக்கவனமும் இருக்கு. தொழிலை வளர்ப்பதில் அக்கறை உள்ளவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் கிடையாது. வருகிற வதந்திகளும் ஒரு வகையில் விளம்பரம் தானே” என்கிறார்கள்.
அண்ணாச்சியின் வெற்றி ரகசியத்தில் இதுவும் ஒன்று.!