“நான் இப்போது ஜெயலலிதாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறேன்.” என்கிறார் கங்கனா ரனாவத்.
இயக்குனர் ஏ எல்.விஜய்யின் இயக்கத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இரண்டு பாகமாக வரவிருக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு. ஜீவி.பிரகாஷ்குமாரின் இசை என வளரவிருக்கிறது.
இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பவர் கங்கனா .இவர் அண்மையில் கோவை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது.:
“நான் ஜெயலலிதாவாக என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன்.தமிழ் ,கிளாசிக் நடனம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இரண்டு பாகமாக வரவிருக்கும் இந்த படத்தில் ஜெ.எவ்வளவு கஷ்டப்பட்டு திரை உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் என்பதை சித்தரிக்க இருக்கிறார்கள்.”என்றார்.