
ஆள் கனமான ஆள். மனமும் அவரைப் போலவே ‘பெரிய மனசு’.
இயக்குநர் கார்த்திக் சுப்புராசைத் தான் சொல்கிறோம்.
கீர்த்தி சுரேஷ் 27 வயது இன்று.
அவரது 24வது படம் கார்த்திக் சுப்பராஜின் பெங்குயின்.கீர்த்தியின் பிறந்த நாளில் அவரது முதல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.
பனிப் பிரதேசத்தில் வாழ்கிற அரிய உயிரினம். தனித் தன்மை படைத்தவை .வெப்ப மண்டலத்தில் வாழாது.
அத்தகைய உயிரினத்தின் பெயரில் உயர்ந்த படைப்பாக கீர்த்தி சுரேஷின் கேரக்டரை உருவாக்கி இருக்கிறார். கர்ப்பிணியாக உயர்த்தி இருக்கிறார் .அதில் எத்தகைய காரணங்களை வைத்திருக்கிறாரோ இயக்குநர்?
பெங்குயினா ? பெண் குயீனா?












