லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டர்.
உலகின் மிகப்பெரிய தியேட்டர்.1871 -ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
மிகச்சிறந்த இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இந்த தியேட்டரில் அரங்கேறி இருக்கின்றன.
சாதனைகள் புரிந்த திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டுள்ளன.
இந்த தியேட்டரில் நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகவும் பெருமையாகப் பேசப்படும்.
இதுவரை இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இங்கு திரையிடப்பட்டதில்லை.
முதன் முதலாக இந்திய மொழிகளில் திரையிடப்பட்ட பெருமை பாகுபலிக்கு கிடைத்துள்ளது.
5544 பேர்கள் அமர்ந்து படம் பார்க்க முடியும். 3 டி பரிமாண படங்களும் பார்க்கலாம்.
2500 கோடிகள் வசூலித்து சாதனை புரிந்துள்ள பாகுபலியைப் பார்க்க அரங்கு நிறைந்த கூட்டம் .பாகுபலி இயக்குநர் ராஜமவுலி, பிரபாஸ்,ரானா டகுபதி, அனுஷ்கா ஆகியோர் இந்த அரங்கில் அமர்ந்து பார்த்ததை பெருமையுடன் சொல்கிறார்கள்.
இந்திய நடிகர்கள் யாருக்குமே கிடைத்திராத வாய்ப்பு.!