
ஒரு காலத்தில் பொது வெளியில் விவாதங்கள் ஆரோக்கியமாக நடந்தன.
தற்போது அப்படி இல்லை!
அறிவாற்றலை காட்டுவதற்காக அந்தரங்கள் கூட இங்கே வினாக்கள் ஆகின்றன.
அப்படி ஒரு நிகழ்வு அண்மையில்!
ஆனால் அந்தரங்கம் பற்றியது இல்லை.
“ராம்லீலா நாடகம் நடத்தியவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்னை?”—இது தொகுப்பாளரின் கேள்வி.
இதற்கு பிரகாஷ்ராஜின் பதில்:
“உங்களுடைய பையன் ஆபாச படம் பார்க்கிறான் என்பதற்காக அவன் என்ன செய்தாலும் பரவாயில்லையா? உங்களுடைய வீட்டில் சிலையை வைத்து கும்பிட்டால் அது கலாசாரம். ஆனால் அதுவே நடுவீதியில் நாடகமாக நடிக்கப்பட்டால் அது கலாசாரம் இல்லை” என்கிறார்.
கோபம் வருகிறது தொகுப்பாளருக்கு.!
“நீங்க யாருங்க எது கலாசாரம் என்பதை முடிவு செய்யசெய்றதுக்கு?”
சீறுகிறார் பிரகாஷ்ராஜ்.
“எனக்கு எது கலாசாரம் எது கலாசாரம் இல்லேங்கிறது நல்லாவே தெரியும்!” என்கிறார் .
இவரை கம்யூனிஸ்ட் என சொல்லுகிறார்கள்.












