வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெளியான அசுரன் சூப்பர் ஹிட்.
இயக்குநர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக வந்திருக்கும் படம்தான் அசுரன்.
100 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிற அசுரன் படத்தின் தெலுங்கு ரீ மேக் கில் வெங்கடேஷ் நடிக்கிறார்.
இந்த படத்தை கலைப்புலி தாணு,சுரேஷ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்..
அசுரனை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியில் கொண்டு வரவேண்டும் என்கிற ஆசை. இவரது நண்பரான தயாரிப்பாளர் கரண் ஜோகரும் அசுரனை பார்த்திருக்கிறார், அவருக்கும் அதே ஆசைதான்.!
இருவரும் இணைந்து படத்தை தயாரிப்பார்கள் என தெரிகிறது. தனுஷ் கேரக்டரில் ஷாருக் நடிக்கிறார். அதிகாரப்பூர்வமான செய்திக்காக வெயிட்டிங்.