தீபாவளிக்கு வந்த படங்களில் விஜய் நடித்திருக்கும் பிகில் படமும் ஒன்று.
கடந்த மூன்று நாட்களில் இந்தப்படம் 150 கோடி அளவுக்கு வசூல் செய்திருக்கிறது. பொதுவாக விஜய்க்கும் ஆளும் அதிமுகவினருக்கும் அவ்வளவாக ஒத்துப் போவதில்லை. அவருடைய படங்கள் ரிலீஸ் ஆகும் போது விஜய் தனது கருத்துக்களை தெரிவிப்பார்.அது ஆளும் கட்சியை குறிப்பதாக சொல்லி அதிமுக அமைச்சர்கள் கடுமையாக விஜய் யை விமர்சனம் செய்வார்கள்.
பிகில் படமும் அத்தகைய பிரச்னையை சந்தித்தது.
தற்போது போருர் அருகில் உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த யாரோ ஒரு வாலிபர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து “விஜய் வீட்டுக்கு வெடி குண்டு வைக்கப்பட்டிருக்கிறது.அது எப்போது வேண்டுமானால் வெடிக்கலாம் “என்று சொன்னதாக தெரிகிறது.
இது தொடர்பாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடன் போலீஸ் அதிகாரிகள் பேசியதாக தெரிகிறது. பனையூர் ஈசிஆர் பகுதியில் இருக்கிற விஜய் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.