ஆந்திராவின் மிகப்பெரிய ,பாரம்பரியத்தை சேர்ந்தவர் ராணா டகுபதி.
இவருடைய தாத்தா டி.ராமாநாயுடு. தமிழ்,தெலுங்கு படத் தயாரிப்பாளர். நாயுடுவின் மகன் சுரேஷ்பாபுவும் பெரிய தயாரிப்பாளர்தான். அந்த வழியில் ராணாவும் சில படங்களைத் தயாரித்திருக்கிறார் .
சென்னையை சேர்ந்த கே.புரடக்சன்ஸ் கே.ராஜராஜன் என்பவர் ராணாவை வைத்து 1945 என்கிற பெயரில் ஒரு படம் எடுத்தார்.
“அந்தப்படம் இன்னும் முடிவடையவில்லை. இன்னும் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. ஆனால் விநியோகஸ்தர்களிடம் ஏமாற்றி பணம் வாங்குவதற்காக தயாரிப்பாளர் படம் முடிந்து விட்டதாக சொல்கிறார். ஆகவே யாரும் ஏமாற வேண்டாம்.”என டிவிட்டரில் ராணா பதிவிட்டிருக்கிறார்.
“அந்த படத்தை பார்க்காதீர்கள்”என்கிற கோரிக்கையும் இருக்கிறது.
எந்த நடிகரும் தன்னுடைய படத்தை பார்க்காதீர்கள் என்று சொன்னதே இல்லை.