மக்கள் மத்தியில் தங்களது கட்சியின் செல்வாக்கினை உயர்த்துவதற்காக பொய்யான,போலியான செய்திகளை வெளியிட ஒரு நிபுணர் குழு உண்டு. அவர்கள் பேஸ்புக் டிவிட்டர் ஆகியவைகளில் பொய்யான தகவல்களை பரப்பி பரபரப்பு உண்டாக்குவார்கள் .
அப்படி ஒரு பரபரப்பு அண்மையில் !
அதாவது இந்தியா வருகிற ரஷ்யன் அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கிறார். இதனால் தமிழ்நாட்டுக்குப் பெருமை. மாமல்லபுரத்தில் மோடி செய்த சாதனையைப் போல இந்த சாதனையும் தமிழரின் வீரத்தையும் கலாசாரத்தையும் பரப்புரை செய்யும் என்று புருடாக்களை அல்லி விட்டார்கள்.
அப்பாவித்தமிழர்களும் ஆதி காலத்தில் விமானம் பறந்ததை அண்ணாந்து பார்த்து ஆசாரியப் பட்டதைப் போல வியந்துபோய் பாஜகவின் சாதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொண்டார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய புருடாக்களை கிளம்பிவிட வல்லுநர் குழு இருக்கிறது.
இந்த ஐடியாவை மற்ற கட் சிகளும் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன என்பதுதான் அநியாயம்.
புதின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வரவில்லை என்பதுதான் உண்மை என்கிறது அந்நாட்டு அரசு தரப்பு.