“என்னை பற்றி தவறான செய்திகள்.என்னை அச்சுறுத்தும் மிரட்டல்கள். உயிருக்கு உத்திரவாதம் வேண்டும்” என்று கேரளா போலீசில் புகார் செய்திருப்பவர் நடிகை மஞ்சு வாரியர் இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவி,.,
மோகன்லாலுடன் மஞ்சு நடித்த ஓடியன் படத்தை டைரக்ட் பண்ணியவர் ஸ்ரீ குமார் மேனன். இவர் மீதுதான் பஞ்சாயத்து.
மேனன் என்ன சொல்கிறார்?
“மஞ்சு புகார் செய்ததுமே எனக்கு போன்கால்கள் வந்தவண்ணம் இருந்தது. கவலைப்படாதே மஞ்சு. உன்னைப் பற்றிய உண்மைகளை ஒளிக்காமல் எல்லாவற்றையுமே சொல்லிவிடுகிறேன்” என சொல்லியிருக்கிறார். இவரது விளம்பர நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றியவர் மஞ்சு வாரியர் என்பது அடிக்கோடிட்டு கொள்ளவேண்டியவை.