இன்று காலை 10 மணி அளவில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலசீதாராமனை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில்,அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் சாமிநாதன்,துணைத்தலைவர்கள் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணைச் செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர்.
இச்சந்திப்பில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பொன்விழா ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும்,திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படும்போது அதற்கான தடையில்லா சான்றிதழ் பெறுவதில் ஒவ்வொரு முறையும் ,அதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க டெல்லிவரவேண்டியுள்ளதால் சென்னையில் அதன் கிளை ஒன்றை தொடங்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.
திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட்டை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும்,ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மூத்த கலைஞர்கள் ஓய்வு ஊதியம் குறித்தும் நிதிஅமைச்சரிடம் விவாதித்தனர். நிர்வாகிகளின் கோரிக்கையை கவனமுடன் கேட்டுக்கொண்ட நிர்மலா சீதாராமன் விரைவில் இது குறித்து நல்ல முடிவுகளை அறிவிக்கிறேன் என அவர்களிடம் தெரிவித்தார்.