
தீபாவளிக்கு வெளியான படங்கள் இரண்டில் தரமான வெற்றியை பெற்றிருக்கிற படம் கைதி. கார்த்தி நடித்திருக்கிற படம். இந்த படத்துக்கு டோலிவுட்,பாலிவுட் என சக திரை உலகிலும் இருந்து வாழ்த்துகளும் பாராட்டுகளும் வந்து கொண்டிருக்கின்றன.
கைதியில் கதாநாயகி கிடையாது. காமடி கிடையாது.பாடல் கிடையாது. ஆனால் அவை எல்லாம் இருந்த பிரமாண்டமான தயாரிப்பான பிகிலுடன் தைரியமாக மோதி நின்று வென்று இருக்கிறது கைதி.இதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். வெத்து வெட்டு பேட்டிகள் கொடுப்பதில்லை.
இந்த படத்தை பார்த்த டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
“அட புதுமையான படமாக்கம். திரில்லரான சண்டைகள்,அசத்தலான நடிப்பு. பாடல் இல்லை, வரவேற்கவேண்டிய மாற்றம்.” என சொல்லியிருக்கிறார்.












