நடிகர் விஜய் நடித்திருக்கும் பிகிலுக்கு அடுத்து அவரது தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டில்லியில் நடைபெறுகிறது.
கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அந்த படப்பிடிப்பு முதல் கட்டமாக டெல்லியில் தொடங்கியது.
வில்லனாக மக்கள் செல்வன் விஜய சேதுபதி. நாயகியாக மாளவிகா மோகனன். கல்லூரி பின்னணியில் டெல்லியில் படமாக்க சென்ற குழுவினருக்கு பெரிய தடையாக இருப்பது இயற்கைதான். மூடு பனி.அடுத்து காற்று மாசு படுதல். இதனால் டெல்லியின் பொது இடங்களில் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. உள்ளரங்கு காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார்கள்.