ஆளுக்காள் பிகில் படத்தை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சுட்ட கதை என்பதால் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க கேரளத்திலிருந்து வித்தியாசமான ஓர் அதிசய செய்தி வந்திருக்கிறது.அதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.
செபாஸ்டியன் என்கிற சிறுவன். பிறந்தது முதல் பேச்சு வரவில்லை.நடக்க இயலவில்லை. எவ்வளவோ டாக்டர்களிடம் பார்த்தும் பயன் இல்லை.
இடுக்கியில் இருக்கிற பஞ்சகர்மா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
அங்கிருக்கிற டாக்டர்கள் கத்தி படத்தின் ‘செல்பி பிள்ள ‘பாடலை ரிங் டோனாக்கி கேட்கவைத்தார்களாம்.அந்த சிறுவனிடம் மாறுதல் தெரிந்ததை பார்த்ததும் உடனே விஜய் நடித்த பட வசனம்,காட் சிகளை காட்டி கேட்க வைத்தார்களாம். தற்போது அந்த சிறுவனால் ஓரளவு நடக்க முடிகிறது என்கிறார்கள்.