எத்தனையோ பெரிய படங்கள் வந்தாலும் சிறிய பட்ஜெட்டில் ராம.நாராயணன் எடுக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருந்ததில்லை. குரங்கு, நாய்,யானை ,பாம்புதான் படங்களின் ஸ்டார்கள்.
தியேட்டரில் பெண்கள் சாமியாடிய வித்தையெல்லாம் அவரது படங்களில்தான் நடந்தது. சூப்பர் ஸ்டார்களை நம்புவதை விட ஜனங்களின் ரசனையைத்தான் ராம.நாராயணன் நம்பினார்.ஜெயித்தார்.
ஜனங்களின் ரசனை என்றுமே ஆபாசத்தை நோக்கி இருந்ததில்லை. கவர்ச்சி நடிகைகளை அளவோடுதான் காட்சிப் படுத்தினார்.
அவரது வழியில் தற்போதைய ரசனைக்கேற்ப படங்களை இயக்க ஆர்ஜே ,பாலாஜி களம் இறங்கி விட்டார் போலும்.!
அதுதான் மூக்குத்தி அம்மன்.
இந்த படத்தின் வழியாக அவருக்கு இயக்குநராக ஐசரி கணேஷ் புரமோஷன் கொடுத்திருக்கிறார்.
பாலாஜி படம் என்றால் அரசியல்வாதிகளின் போலித்தனம் உதை வாங்கும் என்கிற நம்பிக்கை உண்டு.இந்த படத்தில் போலிச் சாமிகள் அடி வாங்குவார்கள் என நம்பலாம் . இந்த படத்தின் இன்னொரு சிறப்பு நயன்தாரா. ஆன்மீக படத்தில் நடிக்கிறார்.