எழுத்துகளின் குரல்வளையை நெருக்கடி நிலை நெரித்தபோது அதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு எதிர்நீச்சல் போட்டவர் ,கலைஞர் கருணாநிதி. அவரது மறைவுக்குப் பிறகு திமுகவில் வெற்றிடம் நிலவி வருகிறது. எழுத்து ,பேச்சு ,வாதப்பிரதிவாதம் ,இலக்கிய பேருரை என தமிழ் சார்ந்து நிற்பதற்கு அங்கு எவருமில்லை.
அவர் இருந்திருந்தால் இயக்குநர் பா.ரஞ்சித் சொன்ன ராஜ ராஜ சோழனுக்கு எதிரான கருத்துக்களுக்கு தக்க பதில் கிடைத்திருக்கும்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதன் வழியாக தமிழகத்தின் திரை உலகில் கவனிக்கத் தக்க மனிதராக இருக்கிறார். அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
அது இது:
“ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்… தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்… “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”