சிறுத்தை சிவா இயக்கும் படத்துக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பெயர் வைக்கவில்லை .அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கப்போகும் படத்துக்கு தலைவர் 168 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஜோதிகா,சூரி ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்தாலும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது இசை அமைப்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டி.இமான் இசை அமைக்கிறார். ரஜினியின் படத்துக்கு முதன் முதலாக இசை அமைக்கிறார் .சிறுத்தை சிவாவுக்கு பிடித்தமானவர் இமான்.தல அஜித் படமான விஸ்வாசத்தின் இசை அமைப்பாளர் இவர் .