சஷிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் படைப்புக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் லண்டனில் வளர்ந்த அந்த செல்லக்குட்டிக்கு நாயகன் தனுஷுக்கு பிடித்தமான காமடியனின் பெயரை வைக்கப்போவதாக செய்தி.
ஐஸ்வர்யா லட்சுமி,ஜேம்ஸ் காஸ்மோ,கலையரசன் ஆகியோர் நடித்திருக்கிற அந்த படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது கொடி கட்டிப் பறந்த ஒரு காமடியனின் பெயரை தனுஷ் சொன்னாராம்.
யாரு கவுண்டமணியா? இல்ல செந்திலா ?
இவர்களுக்கும் முன்னாடி தனது கரகர குரலில் கவர்ந்திழுத்த சுருளிராஜனின் பெயரை சொன்னதாக கேள்வி.
கார்த்திக் சுப்பராஜ்க்கும் பிடித்துப் போக ‘சுருளி ‘என வைத்தால் என்ன என்கிற ஆலோசனை வட்டமடிக்கிறது.