
உலக ஏழு அதிசயங்களில் தொங்கும் தோட்டமும் ஒன்று.பாபிலோனின் தொங்கும் தோட்டம் என்பார்கள். இதுவரை யாரும் இங்கு படப்பிடிப்பு நடத்தினார்களா என்பது தெரியவில்லை.
“சைய்ய சைய்யா “என அட்டகாசமாக ஆடிப்பாடிய மலைக்கா அரோரா ஒரு வேளை அங்கு உல்லாசப்பயணமாக போயிருந்தாலும் ஆச்சரியமில்லை. வசதி படைத்த உல்லாச வாசிகள் பார்க்க வேண்டிய இடம் தொங்கும் தோட்டம்.
மலைக்கா அரோரா விவாக ரத்து வாங்கியவர். வயது வந்த மகனும் இருக்கிறார். இந்த நிலையில்தான் தன்னைவிட 10 வயது குறைவான அர்ஜுன் கபூரை காதலிக்கிறார். இவர் போனிகபூரின் முதல் தாரத்து மகன்.இருவரும் கல்யாணம் செய்யப்போகிறார்களாம்.
சரி இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா?
வயசானாலும் வாலிபம் குறையவில்லை.இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது என்பதற்காக இப்படிப்பட்ட படங்களை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.












