ரோஜா சீரியலில் பப்ளிமாஸ் மாதிரி ஒரு நடிகை வருவாரே கன்னமெல்லாம் உப்பி.!
அவரது கல்யாணம் மணமேடை ஏறாமலேயே நின்று போனது.
இவர் தெலுங்கு நடிகை.பெயர் பிரியங்கா. இவர் தெலுங்கு நடிகர் ராகுல் என்பவரை காதலித்தார். தெலுங்கு திரை உலகத்தை விட தமிழ் சீரியலில் சம்பளம் ஜாஸ்தி.புகழும் அதிகம்.டிமாண்ட் எக்கச் சக்கம் .
இந்த நிலையில்தான் ராகுலுக்கும் பிரியங்காவுக்கும் நிச்சயம் நடந்தது. மகிழ்ச்சி பொங்கியது.
ஆனால் ராகுலுக்கு மலேசியாவில் நல்ல வேலை கிடைக்க அங்கேயே போய் செட்டில் ஆகி விடலாம் என நினைத்தார்.
ஆனால் ரோஜா நடிகைக்கு?
பணமும் புகழும் கிடைப்பதை விட மலேசிய வாழ்க்கை என்ன குபேர வாழ்க்கையா?
நடிகை ஆச்சே!
மலேசியாவுக்கு வருவதாக சொல்லி கடைசி நிமிடம் வரை போக்கு காட்டி விட்டு ஏர்போர்ட்டுக்கு போகவில்லை.
இதனால் இருவரது கல்யாணமும் நின்று விட்டது.
இந்த ராகுல் இல்லை என்றால் இன்னொரு ரகு கிடைக்க மாட்டாரா?