ஆண்டாளை விமர்சித்ததாக சொல்லி தவளைகளில் இருந்து தத்துவம் எழுதுகிறவர்கள் வரை சிலர் கவிஞர் வைரமுத்துவை ஆபாசமாக அர்ச்சனை செய்தார்கள்.
என்னடா இது சோதனை என்று வைரமுத்துவின் வட்டாரம் கலங்கிப் போனது.
ஒத்தை நாமம் ,ஒய் நாமம்,யு நாமம் போடுகிறவர்களும் போராடுவோம் என கிளம்பி விட்டார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நித்தியானந்தாவும் களத்தில் இறங்கியதுதான்.
நடிகையுடன் கட்டிலில் கனிரசம் பருகிய இவரது வீடியோ வெளியாகி கேவலமான இமேஜை உருவாக்கி இருந்தது.
தனது ஆசிரமத்து சீடப்பெண்களை விட்டு கன்னா பின்னாவென பேசச் சொல்லி வீடியோக்களை வெளியிட்டார்.
அதன் ரகசியம் இப்போது வெளியாகி இருக்கிறது.
“கெட்ட வார்த்தைகளை சொல்லிக் கொடுத்து வைரமுத்துவை திட்டச்சொன்னதே நித்தியானந்தாதான் “ஜனார்த்தன ஷர்மாவின் மகள் சொல்லியிருக்கிறார்!
யாரிந்த ஷர்மா?
நித்தியானந்தாவின் செயலாளர். இவர் மடத்தை விட்டு வெளியேறிவந்து விட்டார் . தன்னுடைய மகளை ஆசிரமத்திலிருந்து மீட்டுத்தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் மடத்தை சேர்ந்த பிராண பிரியா,பிரிய தத்துவா என்கிற ஆசிரம நிர்வாகிகளை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
எத்தனையோ புலனாய்வு பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் .அவர்களால் கூட நித்தியானந்தாவை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர முடியவில்லையே!