
நடிகர் ரஜினிகாந்த் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது, ‘எனது வாழ்க்கையில் இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்ததுதான் பெரிய திருப்புமுனை நடிப்பு பயிற்சி எடுத்தபோது எனக்கு தமிழ் தெரியாது பாலச்சந்தர் நம்பிக்கை அளித்து நடிக்க வைத்தார் தமிழ் கற்றுக்கொள்ள எங்கு கொண்டுபோய் சேர்க்கிறேன் பார் என்று சொன்னார் அபூர்வராகங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் கிடைத்தது மூன்று முடிச்சு படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார் நான் கதாநாயகன் ஆவேன் என்று அப்போது நினைக்கவில்லை கலைஞானம் தான் பைரவி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இந்தி படத்திலும் நடித்து இருக்கிறேன். மொழி தெரியாததால் சிரமங்கள் இருந்தன. பெங்களூருவில் வசிப்பவர்களுக்கு மூன்று மொழிகள் தெரியும். எனக்கு கூடுதலாக மராத்தியும் தெரியும். ராகவேந்திரா படம் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.புத்துணர்ச்சி பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் நான் இமயமலை செல்கிறேன் . என் வாழ்வில் எனக்கு பெரிய உத்வேகமாக நான் கருதுவது அமிதாப்பச்சன் தான். குடும்ப உறவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் கேமராவுக்கு பின்னால் கூட நாம் நடிக்க வேண்டியிருக்கும் . ஆனால் நன்றாக நடிக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்