இன்றைய டாப் அதிமுக தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் ஜெயலலிதா.எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் அம்மா என்றால் ஜகா தான் !
கிடா மீசை வைத்துக் கொண்டு பார்ப்பதற்கு படு பயங்கரமாக காட்சி தருவார்கள். ஊருக்குள் நாலைந்து தலைகளை உருட்டியவர்களாக இருப்பார்கள். ஆனால் அம்மாவைக் கண்டால் அப்படியே சுருட்டைப் புழுவாய் சுருண்டு விடுவார்கள்.இன்றைய அமைச்சர்களெல்லாம் எப்படி பஸ்கி,தண்டால் எடுத்தார்கள் தெரியுமா?
ஹெலிகாப்டரைப் பார்த்து கும்பிட்டு போட்டவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள். இவையெல்லாம் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் இடம் பெறுமா என்பது தெரியவில்லை. “இந்த லேடியா ,அந்த மோடியா ?” என கேட்டவர்தான் புரட்சித் தலைவி.
அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் வட இந்திய நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்..ஜெ.மேக்கப்பில் இருக்கிற அவரது படத்தை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.