
கன்னங்கள்ல ரெண்டு ‘பன் ‘வெச்ச மாதிரி!
பொந்து கண்ணு.!
அச்சு அசலா ஜெயலலிதா மாதிரி கொண்டு வர முடியாதுதான் ,அதுக்காக இப்படியாப்பா? செத்துப் போன அந்த மனுஷியின் மீது இப்படியெல்லாமா வன்மம் பாராட்டுறது. படத்தைப் பார்த்திட்டு திமுக சைடுல ரொம்ப சந்தோஷமாம். “வெச்சு செய்றாங்கப்பா”
“நாம்ம வெச்ச சிலையே பரவாயில்லையே…எப்படியோ கண்ணு வரஞ்சு ,கருப்பு பெயிண்டு தலைக்கு அடிச்சிட்டு சமாளிச்சிருக்கோம் .கட்சிக்காரன் கும்பிட்டுப் போயிடறான்.சினிமால இன்னும் எத்தனை அம்மாவை காட்டப் போறாய்ங்களோ தெரியலியே ” என்று அதிமுக சைடில் பயத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.
இன்னும் ரெண்டு திரைப்படங்கள் இருக்கு அதில எப்படி பிள்ளையார் பிடிக்கப்போகிறார்களோ! நித்யாமேனன் ,ரம்யா கிருஷ்ணன் இவர்களும் வேஷம் கட்டப்போகிறார்கள்.இவர்களும் பிராஸ்தடிக் மேக் அப் செய்து கொள்வார்களா அல்லது சாதாரணமாகவே வருவார்களா என்பது தெரியவில்லை.












