அண்மையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு மாணவனின் காலைப் பிடித்து “கை “குலுக்கியது பெரிதும் பாராட்டப் பெற்றது.
கைகள் இரண்டும் இல்லாத அந்த மாணவனின் பெயர் பிரணவ்.
முதல்வரை சந்திக்க வேண்டும் என்பது பிரணவ்வின் நெடு நாள் கனவு. மக்கள் மதிக்கும் அந்த முதல்வரை சந்தித்தபோதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. கைக்குப் பதிலாக பிரணவ் காலை நீட்ட பினராயி விஜயனும் அந்த காலை பற்றி ‘கைகுலுக்கினார்.
பிரணவ்க்கு மற்றோரு ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க வேண்டும் என்பது….
ரஜினியும் பத்து நிமிடம் நேரம் ஒதுக்கினார்.
சந்தித்தபோது அவரும் பினராயி விஜயனைப் போலவே காலைப் பிடித்து கை குலுக்கினார்.
தற்போது அந்த படம் வைரலாகி வருகிறது.