போகிற போக்கினைப் பார்த்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தல் நேரத்தில் கூட கட்சியை ஆரம்பிக்க மாட்டார் போலிருக்கிறதே.!
அந்த அளவுக்கு நடிப்பதில் பிசியாகி வருகிறார்.
கைதி படத்தின் வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 64 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனலுக்கும் படம் பண்ணப்போகிறார்.
கைதியின் வெற்றியை பார்த்ததுமே உடனே அவருக்கு போன் வழியாக வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் அண்மையில் அவரை வீட்டுக்கு வரவழைத்துப் பேசி இருக்கிறார்.
“கதை ரெடி பண்ணுங்க.!”
“மகிழ்ச்சி சார் ரெடி பண்ணிட்டு வர்றேன் !”