குற்றம் 23 படத்தை தொடர்ந்து, இயக்குனர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. பெரும் பொருட்செலவில், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தை ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார்.
இது குறித்து இயக்குனர் அறிவழகன் கூறியதகவது, “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும்.
இன்னும் ஒரு சில நாட்களில் இப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது.இதில்,ரெஜினா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடந்து வருகிறது என்கிறார்.
அறிவழகனின் நெருங்கிய நண்பர் ராஜசேகர் இப்பத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.
இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.












