“இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்; சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்.
இன்று காலை கவிப்பேரரசு வைரமுத்து புதுடெல்லி சென்று இருந்தார். அங்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார்.அந்த சந்திப்பைத்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.
கிட்டத்தட்ட பழி வாங்கும் வகையில்தான் சிதம்பரத்தை சிபிஐ நடத்தியது. திகார் சிறையில் அடைப்பதற்கு அறிவுரை அல்லது ஆலோசனை சொன்னது பிஜேபி மேலிடம்தான் என்பது அரசியல்வாதிகளுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.
காங்கிரஸ் ஆட்சியின்போது பிஜேபியின் சாணக்கியர்களை சிபிஐ வேட்டையாடியதற்கு பதில் நடவடிக்கைதான் சிதம்பரத்தின் கைது நடவடிக்கை, திகார் ஜெயில்.
எனவே இந்திய அரசியலில் நாணயம்,நேர்மை என்பதெல்லாம் வெறும் வாய் பேச்சுதான்!
இங்கே எவனும் புத்தன்,காந்தி கிடையாது.