இதாண்டா போலீஸ் என்று அதிரடி காட்டியவர் டாக்டர் ராஜசேகர்.
தெலுங்கு தேசத்தின் சூப்பர்களில் இவரும் ஒருவர். சினிமா,அரசியல் என கலக்கி வருகிறவர். இவரின் மனைவி நடிகை ஜீவிதா என்பதை சொல்லத் தேவையில்லை.
இவர்களின் மக்களும் சினிமாவில் நடிக்காத தொடங்கி இருக்கிறார்.
நல்லா நடிக்கட்டும். இப்ப அதில்லை பிரச்னை! ராஜசேகருக்கு ஹைதராபாத் டிராபிக் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர். விஜயகுமார் கொடுத்திருக்கிற சர்டிபிகேட்தான் குடைச்சல்.
ராஜசேகரின் டிரைவிங் ஸ்டைலை கடுமையாக கண்டித்திருக்கிறார்.
அண்மையில் நடந்த கார் விபத்தில் ராஜசேகரின் தலை தப்பியதே ஜீவிதாவின் தாலி பாக்கியம் என்கிறார்கள்.
போலீஸ் கமிஷனர் விஜயகுமாரின் ‘பாராட்டுப் பதிவு ‘ இனி படிப்பதற்கு….
“ராஜசேகருக்கு கார் ஓட்டுகிற அடைப்படை சென்ஸ் இருக்கா இல்லையான்னே தெரியல. ஏமாற்றி அல்லது டூப் போட்டுத்தான் லைசன்ஸ் வாங்கி இருக்கணும். ரோட் சென்ஸ் இல்லாதவருக்கு லைசன்ஸ் எதுக்கு? அந்த உரிமையை திரும்ப வாங்க வேண்டும்.”என சிபாரிசு செய்து இருக்கிறார்.