பாடகியும் நல்ல நடிகையுமான ஆண்ட்ரியா ஜெர்மையா முற்போக்குள்ள மனுஷி.
ஆங்கிலோ -இந்தியர் ரோமன் கத்தோலிக் . இவரே ஆங்கிலத்தில் பாடல்களை எழுதுவார் அந்த அளவுக்குத் திறமை சாலி. பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது மோசமான காதல் அனுபவத்தைப் பற்றியும் பாடினார்.அவரே எழுதிய பாடல் அது..
மீடியாக்களுக்கு எத்தனை,கண்கள், செவிகள் என்பதை எவனாலும் சொல்ல இயலாது. அவர் எந்த சூழலில் அதைப் பாடினார்? அவருக்கு மட்டுமே தெரியும். எவ்வளவு வலி இருந்தால் அது கவிதையாக ஜனித்து பாடுகிற அளவுக்கு வந்திருக்கும் .
தனது சொந்த வாழ்க்கையில் நடந்து விட்ட மோசமான காதல் அனுபவம் என்பதாக சொன்னார். அந்த ஆள் யார் என்பதை பின்னர் சொல்வதாக சொன்னார்.
அங்கேதான் ஏழரை மறைந்திருந்தது.!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய உறவுக்காரரான இசை அமைப்பாளர் அனிருத்துடான காதல் அனுபவமாக இருக்குமோ? இவருடன் ஆண்ட்ரியா கட்டியணைத்து லிப் லாக் பண்ணிய படம் வெளியாகிய நினைவுகள் மீடியாக்களுக்கு நினைவு வந்தது.
ஒரு அரசியல் தலைவருடன் லிவ் இன் ரிலேஷனின் இருந்ததாகவும் அரசல் புரசலாக மற்றோரு செய்தியும் வந்தது.
ஆனால் லிப் லாக் பட உண்மையை ஒப்புக்கொண்ட ஆண்ட்ரியா அந்த லிவ் இன் ரிலேஷன் சமாசாரத்தை மட்டும் கடுமையுடன் மறுத்தார்.
தற்போது ஆண்டிரியாவின் மனசு பேசுகிறது…அது உண்மையைத்தான் சொல்கிறதா? அது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
என்ன சொல்கிறார் ஆண்ட்ரியா?
“எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேசுவது தப்புங்கிறத உணர்ந்து விட்டேன்.நல்ல பாடம். இதுக்காக நான் பட்ட மன உளைச்சலை ஒரு பாட்டாக எழுதிடலாம் போலிருக்கு. பத்து வருஷங்களுக்கு முன்பு எழுதிய பாடல் அது. எனது மோசமான காதல் அனுபவம். அதுக்கு எப்படியெல்லாம் சாயம் பூசினார்கள். நடிகர்,அரசியல்வாதி இப்படியெல்லாம் உருவம் கொடுக்கப்பட்டது.ஆனால் அவை உண்மை இல்லை!” என்கிறார் ஆண்ட்ரியா.