இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கனவுப் படைப்பு “குற்றப் பரம்பரை”.
அதைப் பற்றி அவர் பேசாத மேடைகளில்லை.
எப்படியாவது அதை எடுத்துடணும் என்ற அவரது எண்ணம் இப்போது திரைவடிவம் பெற இருக்கிறது.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் -சுரேஷ் காமாட்சியின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில் வலைத் தொடராக (Web series) குற்றப் பரம்பரை வெளிவர இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
வெப் சீரியல்களில் வசதி இருக்கிறது .எண்ணியதை படமாக்கிவிடலாம். வசனங்களிலும் விளையாட முடியும். ஆனால் சுயக்கட்டுப்பாடு தேவை. சண்டியர் என்கிற சரளமாக புழங்கிய ஒற்றை வார்த்தையில் அரசியலை கண்ட மாமேதைகள் இருக்கிற நாடு. சாதியின் பெயரால் குறுக்குக்கட்டைகள் போடாமல் இருக்க வேண்டும்.! கடவுளே ,சுரேஷ் காமாட்சியை காப்பாற்று.!