சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிற வாய்ப்புக்காக காவடி எடுத்து மலை ஏறவும் பலர் தயாராக இருக்கிறார்கள்.
தமிழகத்தின் பிரபல இயக்குநர்களுக்கும் அவரை இயக்குகிற ஆசை இருக்கிறது. ஆனால் அதை தீர்மானிக்கும் அதிகாரம் தயாரிப்பாளர்களுக்கு இருப்பதில்லை. நடிகராக ரஜினிகாந்துக்குத்தான் இருக்கிறது. பணம் போடுகிற வேலை மட்டுமே தயாரிப்பாளருக்கு.!
ரஜினியின் அழைப்பை ஏற்க மறுத்த சம்பவத்தை மலையாள நடிகர்,இயக்குநர் பிருத்விராஜ் இப்போது வெளியிட்டிருக்கிறார்.
“எனது லூசிபர் படம் வெளியாகவேண்டிய நேரம். தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும்படி ரஜினிகாந்த் அழைப்பு விட்டிருந்தார்.
நான் சொந்தப்படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.’ஆடுஜீவிதம் ‘அடுத்து நான் இயக்கவேண்டிய படம்.அதனுடைய வேலைகளும் இருந்தன.
மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் எனக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இதனால் ரஜினியின் கோரிக்கையை என்னால் ஏற்கமுடியாத நிலை. அவருக்கு நீண்ட மன்னிப்பு கடிதம்.
என் வாழ்க்கையில் அவ்வளவு நீளத்துக்கு யாருக்கும் கடிதம் எழுதியதில்லை. இதே கால கட்டத்தில் சிரஞ்சீவியிடம் இருந்தும் ஒரு வாய்ப்பு வந்தது.” என சொல்லியிருக்கிறார் பிருத்விராஜ்.