“எனக்கும் ஒரு நேரம் வரும் ,காத்திருப்பேன். காலமும் நேரமும் எனக்கு சாதகமாக அமைகிறபோது அறுத்தெறிவேன்” என்பது அரசியல்.
அதுதான் தற்போது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நடந்திருக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் அப்துல்கலாம் கவிஞருக்கு ‘காப்பிய கவிஞர் ‘ விருது வழங்கினார்.
முன்னாள் பிரதமர் அமரர் வாஜ்பாய் இவருக்கு ‘கவி சாம்ராட் ‘என்கிற விருதினை வழங்கி கவுரவித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி “கவிப்பேரரசு “என பட்டம் சூட்டினார்.
சாகித்ய அகாடமி விருது,7 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் என்கிற இந்திய விருதுகள் ,மூன்று டாக்டர் பட்டங்கள் இப்படி எத்தனையோ விருதுகள் ….
இவரைப் பாராட்டி எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் வழங்க முடிவு செய்து அதனுடைய நிறுவனர் பாரி வேந்தர் மூன்று மாதங்களுக்கு முன்னரே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதி இருந்தார்.
பா.ஜ.க.வின் ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் என்பவர் வைரமுத்து பேசிய ஆண்டாள் பற்றிய குறிப்புகளை அமைச்சருக்கு அனுப்பி வைத்திருந்தார். பா.ஜ.க.வை சேர்ந்த தமிழக தலைவர்களும் கடிதம் எழுதி வரக்கூடாது என்று சொல்லி விட்டார்கள்.
வைரமுத்துவுக்கு பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.