
அனுஷ்கா ,பிரபாஸ் இருவருமே நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் இருப்பவர்கள்.
காதலர்கள் என்கிறார்கள்.கல்யாணம் நடந்து விடும் என நம்பினார்கள். ஆனால் இருவர்க்கும் வயது வளர்கிறதே தவிர வாழ்க்கை அமைவதாக இல்லை.
தள்ளிப் போகிறதா? அல்லது தடைகள் இருக்கிறதா ,தடைகளை உடைக்க முடியாமல் தவிக்கிறார்களா?
காரணம் எதுவென தெரியவில்லை.
“எங்களுக்குள் காதல் இல்லை. நல்ல நட்பு இருக்கிறது”என்பதை பிரபாஸ் திரும்ப, திரும்ப சொல்கிறாரே தவிர அவரும் கல்யாணம் செய்வதாக இல்லை. அனுஷ்காவும் பண்ணிக்கொள்கிற மாதிரி இல்லை.
இத்தகைய நிலையில்தான் அனுஷ்காவுக்கு ரி எண்ட்ரி யாக ‘நிசப்தம்’ என்கிற படம் வெளியாகிறது.
இதற்கான முன்னோட்டவிழாவில் பிரபாஸ் கலந்து கொள்கிறார் என்பது அக்கட சீமையில் செய்தி.மற்றோரு நடிகர் நடித்த படங்களுக்கு பொதுவாக இவர் போவது இல்லை.
‘விக்ரமரகுடு’ ‘பாகுபலி ‘ ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
அனுஷ்காவை பற்றிய இவரது கருத்து என்ன தெரியுமா? ரம்யா கிருஷ்ணனைவிட அனுஷ்காவுக்கு திறமை போதாது என்பதுதான்.
“ஆவரேஜ் நடிகைதான் அனுஷ்கா .ஆனால் கடுமையான உழைப்பாளி…டெடிகேஷன் உள்ளவர். அதனால்தான் அவரால் திறமையான ரம்யா கிருஷ்ணனுக்கு ஈடு கொடுத்து நடிக்க முடிந்தது ” என்கிறார்.












