
தமிழ்ச்சினிமா உலகில் சமுதாயம் சார்ந்து சிந்தித்து, பேசுகிறவர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். கதாசிரியர்,இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் .தமிழில் பிசியாக இருக்கிறவரை ஆந்திரமும் கன்னடமும் காந்தமாக இழுத்திருக்கிறது.
தெலுங்கில் பிரபல இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலி தனது ‘ஆர்.ஆர்.ஆர் ‘படத்தில் வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார். கன்னடத்து உபேந்திரா இவரை தனது கப்ஸா என்கிற ஏழு மொழி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.












