
பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏன் வைரமுத்து பாடல் எழுதவில்லை. இத்தனை ஆண்டுகளாக மணிரத்னம்-ஏஆர் ரகுமான் கூட்டணியில் இருந்த கவிஞரை இந்த படத்தில் கழற்றி விட்டு விட்டார்களா? காரணம் பாடகி சின்மயிதானா?
கும்பி காய்ந்தாலும் கவலைப்படாத தமிழனுக்கு வைரமுத்து ஏன் மணிரத்னம் படத்துக்கு பாடல் எழுதவில்லை என்பதுதான் பெருங்கவலை?
கவலைக்கும் காரணம் இருக்கிறது…எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்கிற நிலை வருமானால் அது அரசியலா.அல்லது உள்குத்து வேலையா என்றறிய ஆர்வம் வருமா வராதா? அப்படித்தான் ஆகி இருக்கிறது.
சிக்கினார் இசைப்புயல். 
“ஏன் சார் பொன்னியின் செல்வன் படத்துக்கு வைரமுத்து பாட்டு எழுதவில்லை?” என்று ரகுமானிடம் கேட்டார்கள்.
“நான் யார் எழுதுகிறார்கள் என்பதைப்பற்றி சொல்ல முடியாது. யார் எழுதுகிறார்கள் என்பதை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்தான் விரைவில் அறிவிக்க இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார்.
அப்படியானால் காரணம் சொல்ல மாட்டார்களா? பிரிவு நிரந்தரம் தானா?












