உலகம் முழுவதும் திரையிடப்பட்ட ‘தர்பார்’ திரைப்படம் இந்தியிலும் தெலுங்கிலும் படுத்து விட்டது.இங்கு முதல் நாள் வசூலே இந்த படம்பாக்ஸ் ஆபீஸ் போகாது என்பதை உணர்த்தி விட்டது என்பதாக சொல்கிறார்கள்.
இந்தியில் விநியோகஸ்தர்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக வட இந்திய பத்திரிகைகள் செய்திகள் வாசிக்கின்றன .
“சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை இந்தியில் டப் பண்ணி திணிக்காதீர்கள். வெளியான படங்களில் ஷங்கரின் 2.0 தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதில் அக்சய் குமார் இருந்ததும் ஒரு காரணம் “என்பதாக எழுதியிருக்கிறார்கள்.