“விகடன் வழங்கும் அவார்டுகளை இனி வாங்கவே மாட்டேன் ” என்று நடிகர்-தயாரிப்பாளர் ஆர்.பார்த்திபன் கடுப்பாகி இருக்கிறார். இருக்காதா பின்னே, அடுத்த ஊருக்காரன் பாராட்டுற போது உள்ளூர்க்காரன் ஒதுக்கிவச்சான்னா கோபம் வரத்தானே செய்யும்.?
ஒத்த செருப்புக்கு விகடன் மாலை போடலியேங்கிற ஆதங்கம்அவருக்கு .!
பார்த்திபனுடன் இப்ப சேர்ந்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன்.
முண்டாசுப்பட்டி,மெகந்தி சர்க்கஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் ஷான் ரோல்டன் . தனுஷ்-செல்வராகவன் இணை சேருகிற படத்துக்கு இவர்தான் இசை அமைக்கிறார்.
மெகந்தி சர்க்கஸ் படம் இசையிலும் சிறந்து விளங்கிய படமாகும். இந்த படத்தை இயக்கியவர் ராசு முருகனின் சகோதரர் சரவண ராஜேந்திரன். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா .
இந்த படம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தை எந்த தேர்வுக்குழுவினரும் கண்டு கொள்ளவில்லை.இதனால் மனம் நொந்துவிட்டார் ஷான் ரோல்டன்.
“திரைப்படத் தேர்வுக்குழுவினர் காதுகளில் மெகந்தி சர்க்கஸின் இசை விழவில்லை என்பது வருத்தம் தருகிறது. அந்த படத்தின் இசையை விரும்பி ரசித்தவர்கள் ரசனையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேர்வுக்குழுவினரை விட ரசனையில் சிறந்தவர்கள் “என்பதாக சொல்லியிருக்கிறார்.
விருதுகளுக்கு விலை உண்டு என்பது இவருக்கும் தெரியவில்லையே !