ஸ்ரீ லங்காவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் செல்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் விசா மறுத்து விட்டது என்பதாக ஒரு செய்தி.
தமிழர்களை கொன்று குவித்த கோத்த பய ராஜ பக்சே தான் தற்போதைய ஸ்ரீ லங்கா அதிபர். இவரது மகன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
“அந்த செய்தி வெறும் வதந்திதான். நானும் எங்கப்பாவும் ரஜினிகாந்தின் விசிறிகள். எங்கள் நாட்டில் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவரது வருகையை எதிர்க்கவில்லை” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த செய்தி பற்றி ரஜினி வட்டாரத்தில் எந்த விளக்கமும் சொல்லவில்லை. ரஜினி படப்பிடிப்பில் இருக்கிறார்.