இந்திய சினிமாவில் ஒரே பன்முக கலைஞர் யார் என்றால் அது ராஜேந்தராக மட்டும்தான் இருப்பார். கதாசிரியர்,பாடலாசிரியர் ,இசை அமைப்பாளர், நடிகர் ,ஒளிப்பதிவாளர் ,எடிட்டர்,தயாரிப்பாளர் ,நடிகர், அரசியல்வாதி என இன்னும் பல பொறுப்புகளை சுமந்து கொண்டிருப்பவர். குட்டிப்பையனாக சிம்புவை சினிமாவுக்கு கொண்டுவந்தவர் இவர்தான்.
தற்போது மகள் இலக்கியாவின் மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்யப்போகிறார் .அந்த குட்டிப் பேரனுக்கு மூணரை வயது இருக்கலாம். ராஜேந்தர் டிரம் வாசித்தால் பேரன் பிரமாதமாக தலை ஆட்டி ஆடுகிறான்.
ராஜேந்தர் கடைசியாக இயக்கி நடித்த படம் வீராசாமி. இதில் மும்தாஜ் ,மற்றும் ஷீலா நடித்திருந்தார்கள் .
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதுதான் காதல் என்கிற படத்தை எடுப்பதாக இருக்கிறார் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் டி ராஜேந்தர் உடன் நடிகை நமீதா நடிக்கிறார். இவருக்கு மறு வாழ்வு.!முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.