நாட்டில் எத்தனையோ பிரச்னைகள்.!இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடெங்கும் எதிர்ப்பலைகள் .
பொருளாதார சிக்கல்கள், போராட்டங்கள்.
பெரியாரை வம்புக்கு இழுத்த நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து தந்தை பெரியார் இயக்கத்தவரின் கண்டன ஆர்ப்பாட்டம். மன்னிப்பு கேள் என்கிற முழக்கம் ஒரு பக்கம். அதெல்லாம் முடியாது என்கிற மறுப்பு இன்னொரு பக்கம்.
இவையெல்லாம் போதாது என்று “இந்தியா -பாரதம் “என்கிற வாக்குவாதம் புதிதாக கிளம்பி இருக்கிறது.
‘தன்ஹாஜி ‘என்கிற படத்தின் விழாவில் பேசிய நடிகர் சயீப் அலிகான் “தன்ஹாஜி படம் கற்பனையானது என்று கருதுகிறேன்.இது வரலாறு இல்லை.ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் இந்தியா என்றொரு நாடு இருந்ததில்லை.” என்று கூறினார்.
ஆனால் இதை மறுத்து ஜெயலலிதாவாக நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத் “ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் பாரதம் என்று ஒரு நாடு இருந்திருக்கிறது.இந்தியா என்பது இல்லை.ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான புராணம் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும்?”என்று தனது சரித்திர அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார்.
புதிதாக ஒரு பட்டி மன்றம்.!