இயக்குநர் பேரரசு வெளியிட்டிருக்கிற படத்தில் சிங்கம் தெரிகிறது. நாய்கள் குறைப்பது தெரிகிறது.
ஆனால் அந்த சிங்கம் யார்,நாய்கள் யார் என்பது மட்டும் புரியவில்லை.!
சிங்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியா அல்லது தளபதி விஜய்யா?
அவர்கள் இருவரையும் வலிமையுடன் ஆதரிப்பவர்தான் பேரரசு.
பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம் பேரரசு.!
அச்சப்படுகிறவர் அல்ல என்பது தெரியும். படத்துக்கு கீழே அடிக்குறிப்பு எதுவும் இல்லை என்பதால் இந்த சந்தேகம். எதிர்ப்புகள் வருமே என்பதால் நாய்கள் யார் என்பதை சொல்லவில்லையோ !
“பெரியாரைப் பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால்! இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!”
இது பேரரசு சொன்னது .ஆகவே அந்த சிங்கம் ரஜினிகாந்த் தான். ! புரிகிறது பேரரசுவின் குறி எவர் மீது என்பது!