ராணுவ வலிமை வழியாக உலக நாடுகளை அச்சுறுத்திவருகிற சீன பெருநாடு இன்று அரண்டு போய் இருக்கிறது. போர் இல்லாமலேயே ஆயிரக்கணக்கான மக்களை இழந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் உலக நாடுகளும் மிரண்டு போய்தான் இருக்கின்றன.
சீனாவின் கொரானா கொடிய நோய் தங்கள் நாட்டுக்கும் வந்தும் விடுமோ என்கிற பயமுடன் அங்கிருந்து வருகிற பயணிகளை தனிமையில் வைத்து சோதித்த பின்னரே அனுமதிக்கிற நிலை இருக்கிறது.
தனது ஓவியங்கள் வழியாக மக்களுக்கு சமூக அக்கறை கொள்வதற்கு உதவி செய்கிறவர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். ராணுவ வீரர்களை போல இரவு , பகலாக பாடுபட்டு வருகிற டாக்டர்கள் ,நர்ஸ்கள் ஆகியவர்களை பாராட்டுகிற வகையில் சித்திரங்களை வரைந்து சமர்ப்பணம் செய்திருக்கிறார்.முப்பதுக்கும் பேற்படட ஓவியங்களை அர்ப்பணித்திருக்கிறார்.