வீடுகளில் விளக்கேற்ற மங்களகரமான பெண்களை தேடுகிறது நமது கலாச்சாரம்.
பட்டனை அழுத்தியதும் வீடே பளிச்சென ஒளி வெள்ளத்தில் ஆழ்ந்து விடுகிற அதிசயத்தை நிகழ்த்தியது விஞ்ஞானம்.
விஞ்ஞான விளக்கெரிந்தாலும் அந்த சிறிய பூஜை அறையில் மகாலட்சுமி விளக்கு இந்தியர்களின் வீடுகளில் இருந்தாக வேண்டும்.ஆனாலும் அதற்கும் மின் விளக்கு வந்து விட்டது.
மின் விளக்கு, மோஷன் பிக்சர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகளின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன்.திரை உலகம் மறக்கக் கூடாத மகராசன்.உலகமே கொண்டாடியது . அவருக்கு நேற்று பிறந்த நாள்.
அவரது பிறந்த நாளை மறக்காமல் நினைவு கூர்ந்திருக்கிறார் எஸ்.தாணு.
சரித்திரப் புலி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு திரை உலக சாதனைப்புலி கலைப்புலி தாணு தனது நன்றிகளை சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
“உலகெங்கும் இருக்கிற திரை உலகம் அவரது பிறந்த நாளை கொண்டாடினாலும் என்றும் நினைவில் இருக்கிற சாதனையாளர்.நம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்” என நன்றி பாராட்டி இருக்கிறார்.
“