நாக்கு தடுமாறுவது என்பது அரசியல்வாதிகளுக்கே உரியது.
சினிமாவாசியாக இருந்தாலும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் குஷ்பூ.
அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர் .சி.தயாரிப்பில் நடிகர் ஆதி நடித்திருக்கிற படம் நான் சிரித்தால் !
இந்த படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடந்தது. சுந்தர் .சி.தனது அரண்மனை 3 படத்துக்காக வெளியூர் சென்று விட்டதால் அவர் சார்பில் மனைவி குஷ்பூ வந்திருந்தார்.
படத்தின் நாயகர் ஆதி ,நாயகி ஐஸ்வர்யா மேனன் ,இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட நடிக ,நடிகையர் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தை இயக்கிய ராணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இல்லை. ஆதி கதாநாயகன், அவருடைய சிரிப்புதான் வில்லன் என்றார். இத்தகைய கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். நடிகர் விஜய் நடிப்பில் பிரமிப்பு காட்டினாலும் மிகவும் கூச்சப்படுவார்.அவரைப்போலவே ஆதியும் கூச்சப்படுகிறார் “என்றார் .
நடிகர் ஆதி பேசுகையில் “‘ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றி பேசுவதை விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவா தான் முதுகெலும்பு.
எனக்கு பல கனவுகள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன். என்னுடன் பணியாற்றும் அனைவரின் கனவும் நனவானதில் மகிழ்ச்சி” என்றார்.
நடிகை குஷ்பூ பேசும்போதுதான் டங் சிலிப்பான சங்கதி நடந்தது. “ஊழலும் வேண்டும் ”என்பதை அவர் சொன்னபோது “என்னடா இப்படி சொல்கிறாரே “என்கிற எண்ணம் நமக்கு வந்தது. அவரின் பேச்சை கவனமுடன் கேட்டுக்கொண்டிருந்த ரவிகுமார் “ஊழலும் வேணுமா?” என கேட்டுவிட்டார்.
அவர் மேலும் பேசியதாவது.
“இதுபோன்ற சினிமா மேடையில் பேசி பல வருடங்கள் ஆகிறது. ‘அவ்னி மூவிஸ்’ என்பது எனக்கும் சுந்தர்.சி-க்கும் கனவு. , எங்கள் இருவருக்கும் தெரிந்தது சினிமா மட்டும்தான். அவ்னி மூவிஸ்-ன் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் எனது கணவர் சுந்தர்.சி மட்டும்தான். நாங்கள் இருவரும் சினிமாவை நேசிக்கிறோம். எங்கள் படங்கள் மட்டுமல்லாமல் அனைவரின் படங்களும் வெற்றிபெற வேண்டும் என்று நினைப்போம். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள் தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்களத்தி ஆதி தான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்
கருத்து, கஷ்டங்கள் ஆகியவற்றை சொல்லும் படம் எடுப்பதைவிட அனைவரையும் மகிழ்விக்கும் படமாக எடுக்க வேண்டும் என்கிற உறுதியோடு இருக்கிறோம். அதன்பலன்தான் , நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் மல்லிகைப் பூ வாசனை வருகிறது என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவது அதிகரித்திருப்பதில் மகிழ்ச்சி.”என்றார்