ஹன்சிகா மோத்வானியின் கை வசம் இருக்கிற தமிழ்ப்படங்களில் பரபரப்புக்குள்ளாகி இருக்கிற ஒரே படம் மகா.
அட்டகாசமான மகாராஜாவின் ஆசனத்தில் ஸ்டைலாக உட்கார்ந்து வாய் நிறைய புகையை வைத்துக் கொண்டு ஊதி அடித்த அந்த ஒற்றைப்படமே குறிப்பிட்ட ஒரு சாராரை கலங்கடித்ததே.!

பின்னர் இந்த படத்துக்கு வலுவாக சேர்ந்தவர் சிம்பு. அவருக்கென தனியாக ரசிகர் பலம் இருக்கிறது. ஹன்சிகாவின் முன்னாள் காதலர்தான் சிம்பு. இவர்கள் இருவரும் சேருகிற படமாக அமைந்திருப்பதால் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கியமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிற இந்த படத்தை யு ஆர் ஜமீல் இயக்கி வருகிறார்.