லைகாவின் பிரமாண்டமான தயாரிப்பான இந்தியன் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த உயிர்ப்பலி தமிழ்த் திரை உலகத்தில் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளித்திருக்கிறது.
இந்த விபத்து குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் தனது கவலையை,துயரத்தை வெளியிட்டிருக்கிறார்.
“எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது.
மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.
எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.
முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும்.”என கூறிஇருக்கிறார்.